ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு நல உதவிகள் செய்த திமுகவினர்

ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு நல உதவிகள் செய்த திமுகவினர்
X

திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது. 

மதுரை திமுக இளைஞரணி சார்பாக வழக்கறிஞர் அன்புநிதி மதுரை ரயில்வே நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரசி மளிகை சாமான்கள் போன்ற உதவிகளை வழங்கினார்.

கொரோனா இரண்டாம் அலை தொற்று தீவிரமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது அதன் முக்கிய பகுதியாக எந்தவித தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதி வரை பிறப்பித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைகளான இழப்பு மற்றும் மருத்துவ உதவி களுக்கு மட்டுமே வர வேண்டும் என்றும் வீடுகளுக்கு தேவையான காய்கறிகள் மளிகை பொருட்களை வீடுதேடி அரசே விற்பனை செய்து வருகிறது..

இந்நிலையில் , இந்த தொற்று காலத்தில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வீட்டில் இருக்கக்கூடிய நபர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

மதுரை திமுக இளைஞரணி பிரிவின் சார்பாக வழக்கறிஞர் அன்பு நிதி மதுரை ரயில்வே நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 500 நபர்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அரிசி பருப்பு மளிகை சாமான்கள் அடங்கிய உதவிகள் வழங்கப்பட்டது..

வழக்கறிஞர் அன்பு நிதி தொடர்ந்து கொரோனா தொற்று பதிப்பின் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என தற்போது வரை 25 ஆயிரம் நபர்களுக்கு மேல் தனது சொந்த முயற்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!