முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்: 5 பேர் கைது
X

மதுரை விளாத்திகுளம் காலாங்கரை முதல் தெருவை சேர்ந்தவர் மோகன் ராஜ் 22. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஷுலாதேவன்28 , பாண்டியராஜன்19 , சுதாகர்20 , உள்பட 5 பேர் மோகன்ராஜ் வீட்டு அருகே நின்று சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை மோகன்ராஜ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷீலாதேவனும் அவரது நண்பர்களும் சேர்ந்து மோகன்ராஜை கல் மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷீலாதேவன்,பாண்டியராஜன், சுதாகர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!