மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்
X

மே 26 அன்று 'ஜனநாயகத்தின் கறுப்பு நாள்' என்று நாடு தழுவிய போராட்டத்தை கடைபிடிக்க விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) விடுத்த அழைப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி நாடு தழுவிய தனது முழு ஆதரவை அழிக்கிறது

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மாவட்டம் சார்பில் கீழவெளிவீதி அண்ணாசிலை அருகில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன பதாகைகள் ஏந்தி கருப்பு குடை பிடித்து விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு எதிராக சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி கதிஜா பீவி, சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் மதுரை மாவட்ட செயலாளர் யூசுப் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர் புறநகர் ரியாஸ், ஆகியோர் காலத்தின் சூழ் நிலை கருதி நான்கு பேர் மட்டுமே பங்கேற்று கண்டன கோஷங்கள் முழங்க கண்டனங்களை பதிவு செய்தனர்.

மாவட்ட தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அவரவர் பகுதியில் வீட்டு வாசல்களில் ஆதரவை தெரிவிக்கும் விதமாக விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி கருப்பு துணிகள், கருப்பு ஆடைகளையும் அணிந்து கருப்பு தினமாக அனுசரித்தனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!