போக்குவரத்து சந்திப்புகளில் திடிரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
விரைவில் மதுரையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் அமைச்சர் பேட்டி
இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மதுரையில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்டம் தோறும் ஊரடங்கு நடைமுறைகளை கண்காணிக்க தமிழக அரசு அமைச்சர்கள் அடங்கிய குழுக்களை நியமித்திருந்தது. இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் மூர்த்தி திடிரென ஆய்வு மேற்கொண்டார். வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் போக்குவரத்து நடமாட்டம் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
முழு ஊரடங்கை மக்கள் 100 சதவீதம் பின்பற்றி வருகிறார்கள் எனவும் மருத்துவ தேவைகளை தவிர பிற காரணங்களை சொல்லி மக்கள் வெளியே வரவில்லை, கோரிப்பாளையம் பகுதியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இருப்பதால் மருத்துவர்கள் செவிலியர்கள் அங்கு பணியாற்ற கூடியவர்கள் நோயாளிகள் என இப்பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் செல்கிறது மற்றபடி ஊரடங்கு 100% முழுமையாக மக்கள் பின்பற்றி வருகின்றனர், மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் தேவைக்கேற்ப காய்கறிகள் வீடு வீடாக சென்று வழங்கப்படுகிறது,, ஆட்சியர், ஆணையர் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.. விரைவில் மதுரையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu