ஊரடங்கு தளர்வு: நடுவானில் திருமணம்..!

ஊரடங்கு தளர்வு:  நடுவானில்  திருமணம்..!
X

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த தம்பதியினர் ராகேஷ் மற்றும் தீக்க்ஷு. இவர்கள் இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். ஊரடங்கு காலம் என்பதனால் வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட இவர்கள், இன்று சில தளர்வுகள் அரசு அறிவித்திருந்த நிலையில் மீண்டும் புதுமையாக திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி, இரு குடும்பத்தினர் திட்டமிட்டு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து பறக்கும் விமானத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக இரு குடும்பத்தை சேர்ந்த 130 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்து 'நெகட்டிவ்' சான்றிதழ் பெற்று மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்வதற்காக சிறப்பு விமானம் ஒன்றை பதிவு செய்தனர்.

அதன் தொடர்சியாக, இன்று காலை சிறப்பு விமானத்தில் பயணம் செய்த புதுமண தம்பிதியினர்கள் பறக்கும் விமானத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். புதுமண தம்பதியினர்களின் இத்தகைய புதுமையான செயல் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.



Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!