கோவில் வாசலில் தாலி கட்டிய புதுமணத் தம்பதிகள்
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில், அனைத்து வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்திலுமே பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட நிலையில் புதுமண ஜோடியினர் அம்மன் சன்னதி வாசலில் நின்றவாறு தங்களது பெற்றோர்கள் முன்னிலையில் தங்களது இல்லற வாழ்க்கையை துவக்கினார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மதுரை மட்டுமல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தை நடத்துவது வழக்கம். இன்று முதல் தளத்துடன் கூடிய புதிய ஊரடங்கு அமல் செய்யப்பட்ட நிலையில் கோவில் வாசலில் நின்றவாறு புதுமண ஜோடியினர் தங்களது இல்லற வாழ்க்கையை துவங்கும் வண்ணம் திருமணம் புரிந்து கொண்டனர்.
மதுரையில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு தேவைப்படக் கூடிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருக்கக்கூடிய நான்கு கோபுர வாயில்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu