கதிரடித்து விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த அமைச்சர்

திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட சோலைப்பட்டி, அம்மாபட்டி, கீழக்காடனேரி, குமாரபுரம், சாலிச்சந்தை, சொக்கம்பட்டி, பொன்னையாபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்கு சேகரித்தார்.
அப்போது சோலைப்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிப்பின் போது அங்குள்ள விவசாயிகள் களத்தில் அறுவடைக் செய்யப்பட்டிருந்த துவரை கதிர்களை விவசாயிகள் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விவசாயிகளுடன் சேர்ந்து தானும் கதிர் அடித்தார். இதனை பார்த்த மக்கள் நெகழ்ச்சி அடைந்தனர். அப்போது விவசாய மக்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
நாட்டின் முதுகெலும்பு உங்களைப் போன்ற விவசாயிகள் ஆவார்கள். அதனால் தான் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி என்று புரட்சித்தலைவர் பாடியிருப்பார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மா விவசாய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தந்து 5000 கோடிக்கு மேல் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்தார். குறிப்பாக முல்லை பெரியாறு, காவிரி போன்றவற்றில் விவசாய மக்களின் உரிமை பிரச்சினையாக போராடி வெற்றி பெற்றார்.
தற்போது முதலமைச்சர் உங்களைப் போன்ற விவசாயி ஆவார் உங்களின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்தவர். திருவாரூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பங்கேற்ற போது அங்கு விவசாய நடவு வேலை நடைபெற்றிருந்தது. முதலமைச்சரும் அங்கு நாற்று நட்டார். முதலமைச்சர் சேற்றில் கால் வைத்த அந்த நல்ல நேரம் இன்றைக்கு தமிழகத்தில் விளைச்சல் இருமடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது அம்மாவின் வழியில் 12,110 கோடி விவசாய கடனை முதலமைச்சர் ரத்து செய்துள்ளார். இதன் மூலம் உங்களைப் போன்ற எண்ணற்ற விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் 17,000 கோடிக்கு மேல் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்த ஒரே அரசு அம்மா அரசு.
அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகை அடகு வைத்து இருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இப்படி பல்வேறு திட்டங்கள் மூலம் இன்றைக்கு விவசாயிகள் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. ஆகவே உங்களைப் போன்ற விவசாயி முதலமைச்சர் எடப்பாடியார் இந்த நாட்டை மீண்டும் ஆள வேண்டும். ஆகவே இந்த தொகுதியில் உங்கள் சேவகனாக நான் நிற்க்கிறேன். உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu