/* */

இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

மதுரையில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது

HIGHLIGHTS

இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
X

பைல்படம்

இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மதுறை பி.பி.குலம் பிரதான சாலையில் வசித்து வரும் மலைராஜன், ரங்கம்மாள் தம்பதியினர் மகன் ஈஸ்வரன் வயது( 30) இவர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது தல்லாகுளம் காவலர்கள் மது வைத்திருப்பதாக கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.அப்போது ஈஸ்வரன் காவலர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து ஈஸ்வரன் அமர்ந்திருந்த பகுதியில் நான்கு மதுபாட்டில்களை கைப்பற்றியதாகவும் மேலும் கூடுதலாக மதுபாட்டில்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஈஸ்வரனின் வீட்டுக்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். போலீசார் ஈஸ்வரனின் தாய் ரங்கம்மாள் செல்போனை பறித்து கொண்டதுடன் அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியையும் காவல்துறையினர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே காவல்துறையினர் தாக்கியதால் தப்பியோடிய ஈஸ்வரன் தல்லாகுளம் காவல்நிலையம் அருகே அம்பேத்கர் சிலை முன்பாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துறையினர் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதனையடுத்து நள்ளிரவு ஒரு மணி அளவில் காவல் நிலையத்திலிருந்து ஈஸ்வரனின் பெற்றோரை தொடர்பு கொண்டு ஈஸ்வரன் தீக்குளித்து தற்கொலை செய்த தகவலை போலீசார் அளித்துள்ளனர்.

.இந்நிலையில் தீக்காயங்களுடன் காணொளி வெளியிட்டுள்ள ஈஸ்வரன் தன்னை காவல்துறையினர் அடிக்கடி துன்ப படுத்தியதாகவும், பணம் கேட்டதாகவும், பொய்வழக்கு பதிவு செய்ததாகவும், மிரட்டியதாகவும், கூறியுள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஈஸ்வரனின் பெற்றோர் தரப்பில், தவறான புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரணை எனக்கூறி தனது மகனை அழைத்து சென்று துன்புறுத்தியதால் செய்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே ஈஸ்வரன் தாயார் ரங்கம்மாள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அவ்வழக்கில் தனது மகன் ஈஸ்வரன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். அவர் மீது எந்தவிதமான வழக்கும் இல்லை. இந்நிலையில் தவறான புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரணை எனது கூறி எனது மகனை அழைத்துச் சென்று துன்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி என் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை தொடர்ந்து தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரித்தால் வழக்கின் உண்மை நிலை தெரிய வராது ஆகவே தல்லாகுளம் காவல் நிலையத்தில் எனது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தகவல் நடவடிக்கைகளை தொடர தடை விதித்து உத்தரவிட வேண்டும் . மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.என கூறியிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Updated On: 8 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!