லஞ்சம் வாங்க மாட்டேன்: காவல் நிலையத்தில் விளம்பர பதாகை ஒட்டிய ஆய்வாளர்

லஞ்சம் வாங்க மாட்டேன்: காவல் நிலையத்தில் விளம்பர பதாகை ஒட்டிய ஆய்வாளர்
X

ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் வைத்துள்ள பதாகை 

லஞ்சம் வாங்க மாட்டேன் என மதுரையில் காவல் ஆய்வாளர் காவல் நிலையம் முன்பு ஒட்டியுள்ள அறிவிப்பு பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். அவர் காவல் நிலைய வளாகம் முன்பு ஒட்டி உள்ள அறிவிப்பு பலகை தற்போது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது .

அந்த அறிவிப்பில், ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியும், நிலைய ஆய்வாளருமான சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சப் பணமும், பொருளும் பெருவதில்லை. என் பெயரை சொல்லிக்கொண்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரை சுமுகமாக முடிப்பதாக கூறி யாரிடமும் பணமோ, பொருளோ கொடுக்க வேண்டாம், கொடுக்கும் பட்சத்தில் நான்பொறுப்பு ஏற்க மாட்டேன் . காவல்துறை உங்கள் நண்பன் என அதிரடியாக காவல் நிலையம் முன்பு அறிவிப்புப் பலகை ஓட்டியுள்ளார்.

காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள் மத்தியில் ஆய்வாளர் சரவணனின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பேசும் பொருள் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய நேர்மையை பாராட்டி மதுரை மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் இவ்விளம்பர பதாகை சமூக வலைதளங்களில் பரவி வருவதால் மதுரை மாவட்ட மக்களும் தமிழகமெங்கும் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் இவருடைய பணியை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!