அடிக்காமலேயே கைப்பம்பில் தானாக தண்ணீர் வெளியேறும் அதிசயம்

அடிக்காமலேயே கைப்பம்பில் தானாக தண்ணீர் வெளியேறும் அதிசயம்
X

வைரவன்பட்டியில், யாரும் இயக்காமலேயே கைப்பம்பில் இருந்து தானாக வெளியேறிக் கொண்டிருக்கும் தண்ணீர்.

மேலூர் அருகே, மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கைப்பம்பில் அடிக்காமலேயே குடிநீர் வெளியேறுவதை, அப்பகுதியினர் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது, வைரவன்பட்டி கிராம. கன மழையால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஊராட்சி சார்பில் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக இங்கு அடிக்குழாய் (போர்வெல் கைப்பம்பு) அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இதனை, யாராவது இயக்கினால் மட்டும் தான், தண்ணீர் வெளியே வரும். ஆனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், இந்த அடிகுழாய் அடிக்காமலேயே குடிநீர் தானாக வெளியேறி சென்று கொண்டிருக்கிறது. இதனை, அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!