பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துகள் ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்
பைல் படம்
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ என்பவர், தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்தார்.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் போதுமான அளவு அதிகாரிகளை கொண்டு, சிறப்பு குழுக்களை அமைத்து தரவுகளை உரிய முறையில் சேகரித்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க, போதுமான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துகளை ஆய்வு செய்து பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என்றும், அவற்றில் முறைகேடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்டவிதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu