நண்பனுக்காக மிரட்டியவர் அவராலேயே கொலை செய்யப்பட்டார்

நண்பனுக்காக மிரட்டியவர்  அவராலேயே கொலை செய்யப்பட்டார்
X

கொலை செய்யப்பட்ட தவசி

மதுரை உலகநேரி பகுதியில் நண்பனுக்காக மிரட்டிய ஓட்டல் ஊழியர் தவசி அந்த நண்பராலேயே கொலை செய்யப்பட்டடார்

மதுரை உலகநேரி பகுதியில் நண்பனுக்காக மிரட்டிய ஓட்டல் ஊழியர் தவசி (21,) அந்த நண்பராலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒத்தக்கடை அருகேயுள்ள மலையாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் தவசி. மாட்டுத்தாவணி ஓட்டல் ஒன்றின் ஊழியர். மே 28 -ஆம் தேதி இரவு தட்டாங்குளம் ரோட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கில் அவரது நண்பர் அரும்பனுார் பாண்டியராஜன்( 21,) இவரது சகோதரர் நரசிங்கம் அய்யனார்( 27,) நண்பர்கள் மலையாண்டிபுரம் ராஜா( 24,) ஆண்டார்கொட்டாரம் மணிமாறன்( 32,) மற்றும் 15 வயது சிறுவனை ஆகியோரை அண்ணாநகர் உதவிகமிஷனர் சுகுமாறன், புதுார் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: தவசியின் நண்பர் பாண்டியராஜன். இவர் மினி வேனில் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் தொழில் செய்கிறார். இவரது கிளீனர் ரஞ்சித், பாண்டியராஜனின் தொழில் எதிரியிடம் வேலைக்கு சேர்ந்தார். இதை அறிந்த தவசி, எதிர் தரப்பினரிடம் சென்று கொலை மிரட்டல் விடுத்தார். ஆத்திரமுற்ற அவர்கள் பாண்டியராஜனிடம், நீயும், நாங்களும் ஒரே தொழில் செய்கிறோம். தவசி மிரட்டுவது சரியல்ல. நாளைக்கே உன்னையும் மிரட்டுவான். ஏற்கெனவே அவன் மீது ஒத்தக்கடை ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது என்றனர்.

இதைதொடர்ந்து தவசியை இருதரப்பும் கொலை செய்ய திட்டமிட்டு மே 28 -ஆம் தேதி சமரசம் பேசலாம் என அழைத்துச்சென்று கொலை செய்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!