தனியார் நிறுவன நகைகளை கொள்ளையடித்தவர்களை கைது செய்த தனிப்படை போலீசார்
கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த (Best Money Gold) பெஸ்ட் மணி கோல்டு என்ற நிறுவனத்தார் விழுப்புரத்தில் இருந்து வாங்கி வந்த 166 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சிவபாலன் உதவி ஆய்வாளர் ஆனந்த், மற்றும் உதவி ஆய்வாளர் பாலமுருகன் , குமரகுரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் இக் கொள்ளைச் சம்பவத்தில் 13 நபர்கள் ஈடுபட்டது தெரிய வருகிறது. இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளில் இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 166 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், எதிரிகளான 1. செந்தில் செந்தில்குமார். 2. வின்சென்ட் @ அருள் வின்சென்ட் 3. ராஜ்குமார் 4. நாராயணன் 5. ஆனந்த். 6 சதீஷ்குமார் 7 முத்துப்பாண்டி 8 ராஜ்குமார் 9 கேரளா மணி என்ற மணி கண்டன் 10 கிருஷ்ணவேணி. 11 சேவுகன் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பி வைத்தனர். மேலும் இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். மேலும் களவுபோன சொத்துக்களை எதிரிகளிடமிருந்து கைப்பற்ற தனிப்படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
மேற்படி தனிப்படையினரின் சீரிய முயற்சிகளையும் குற்றவாளிகளையும் களவுபோன சொத்துகளையும் மீட்டதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தனிப்படையினரை பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu