மதுரை நிதி நிறுவனத்தை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

மதுரை நிதி நிறுவனத்தை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை
X

கொள்ளையடிக்கப்பட்ட நிதி நிறுவனம்.

மதுரை துரைசாமி நகரில் நிதி நிறுவனத்தில் மர்ம நபர்கள் கதவை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலூரை சேர்ந்த குருசாமி. இவர் மதுரை துரைசாமி நகர் பகுதியில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

பொங்கல் முடிந்து நேற்று காலை வந்து நிதி நிறுவனத்தை திறக்க முயன்றபோது, அலுவலக கதவை உடைத்து லாக்கரில் இருந்த சுமார் 5 லட்சம் 11 ஆயிரத்து 990 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குருசாமி, எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநய் வரவழைத்து நிதி நிறுவனத்தை சோதனை மேற்கொண்டனர்.

மேலும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!