பழிக்குப்பழியாக மதுரையில் கொலைகள்: உயர்நீதிமன்ற கிளை அதிருப்தி

பழிக்குப்பழியாக மதுரையில் கொலைகள்: உயர்நீதிமன்ற கிளை அதிருப்தி
X

பைல் படம்

மதுரை மாநகரில் பழிவாங்கும் நோக்கில் நடக்கும் தொடர் கொலைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

பழிக்குப்பழியாக மதுரையில் கொலைகள் நடப்பது குறித்து உயர்நீதிமன்ற கிளை அதிருப்தி தெரிவித்தது.

மதுரை பழிவாங்கும் நோக்கில் நடந்து வரும் தொடர் கொலைகளால் மதுரை மாநகர் விசித்திரமான சட்டம் ஒழுங்கு பிரச்னையை சந்தித்து வருவதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி.தெரிவித்துள்ளது. மதுரை கீரைத்துறை சேர்ந்தவர் குருசாமி இவருக்கும் ராஜபாண்டி கோஷ்டிக்கும் முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக இரு கோஷ்டியைைச் சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது.குருசாமியின் மருமகன் எம்.எஸ் .பாண்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்ற சின்ன வாய் தலையை கொலை செய்ய குருசாமி தரப்பு திட்டமிட்டது. இதற்காக குழு அமைக்க உதவிய முருகானந்தம் என்பவரை தூய மரியன்னை தேவாலயம் அருகே 15 .11 .2020 இல் மணிகண்டன் தரப்பு கொலை செய்தது.

இந்த வழக்கில், அழகுராஜா என்ற கொட்டு( 25 ), ராஜா(21) உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அழகு ராஜா , ராஜா உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது கைது செய்யப்பட்டனர். அழகுராஜா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாய் ஆறுமுகத்தம்மாள் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன்,ஜி. ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு.

மதுரையில் கோஷ்டி மோதலால் பழிக்குப்பழியாக அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. இதனால் மதுரை மாநகரம் விசித்திரமான சட்டம் ஒழுங்கு பிரச்னையை சந்தித்து வருகிறது .அதில் ஒரு கொலையில் தொடர்புடைய வர்கள் தான் மனுதாரர்களின் மகன்கள், இந்த வழக்கில் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதில் முன் நடத்தை அடிப்படையில், மனுதாரர்களுடைய மகன்கள் உட்பட 4 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தீர விசாரித்த பிறகே இந்த குண்டர் சட்ட உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதில் தலையிட வேண்டியதில்லை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!