மேலூரில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள் கவலை

மேலூரில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள் கவலை
X
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நேற்று கனமழை பெய்தது; வாழைகள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இப்பகுதியில் ஒரு சில இடங்களில் பாறை கற்கள் போல் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால், அப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவியது.

தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் ஆலங்கட்டி மழை பெய்தது மக்களுக்கு குளிர்ச்சியை கொடுத்தாலும், விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு, வாழை போன்ற பயிர்கள், மழையால் சேதமடைந்தன. மாவட்ட நிர்வாகம் விவசாய நிலங்களை பார்வையிட்டு சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!