அகில இந்திய அளவில் வாலிபால் போட்டியில் தமிழக அணியில் இடம்பிடித்த மதுரை இளைஞர்

அகில இந்திய அளவில் வாலிபால் போட்டியில் தமிழக அணியில் இடம்பிடித்த மதுரை இளைஞர்
X

 வாலிபால் போட்டியில் இடம்பிடித்து விளையாடிய தமிழக வீரருக்கு சொந்த ஊரில் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் நடந்த வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த மதுரை இளைஞருக்கு ஊரில் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

அகில இந்திய அளவில் வாலிபால் போட்டியில் இடம்பிடித்து விளையாடிய தமிழக வீரருக்கு சொந்த ஊரில் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்ற தமிழக அணியில் இடம்பெற்ற மேலூர் சொக்கலிங்க புரத்தை சேர்ந்த விளையாட்டு வீரருக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த இளைஞர் கோபிநாத் .இவர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜூனியர் வாலிபர் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்றார்.

இப்போட்டியில் விளையாடிய தமிழக அணி முதலிடம் பிடித்தது. அங்கு வெற்றி பெற்று பரிசுகள் வாங்கி ஊர் திரும்பிய இளைஞர் கோபிநாத்துக்கு சொக்கலிங்கபுரம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், பெற்றோர்கள், அம்மன் பிரதர்ஸ் உள்பட அனைவரும் மேளதாளத்துடன் மாலை மரியாதை செய்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

Tags

Next Story