பெண்களின் பாதுகாப்பு: பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்

பெண்களின் பாதுகாப்பு: பள்ளிகளில் விழிப்புணர்வு  முகாம்
X
மதுரை ஒத்தக்கடை மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை போலீஸ் எஸ்பி பாஸ்கரன் மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்

பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட எஸ்பி வீ. பாஸ்கரன்.

மதுரை அருகே ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒவ்வொரு காவல் நிலையத்தை சேர்ந்த பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் அவசர எண் 100 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் காவலன் SOS செய்லி குறித்தும் பள்ளி மாணவிகளுக்கு பாஸ்கரன் விவரங்களை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மலைச்சாமி வழக்கறிஞர், மற்றும் மாவட்ட குழு பாண்டியராஜா ,மாவட்ட குழந்தைகள் நலக்குழு சமந்தா , ஸ்ரீதரன் மனநல ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாணவிகள் தங்களது பாதுகாப்பு ,மற்றும் அவர்கள் வாழ்வில் சந்திக்கக்கூடிய சிறுசிறு பிரச்னைகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கூறி அதற்கான பாதுகாப்பு விவரங்களையும் அறிந்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil