/* */

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு: உயர்நீதிமன்றம் கேள்வி

தெப்பக்குளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

HIGHLIGHTS

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு: உயர்நீதிமன்றம் கேள்வி
X

தெப்பக் குளத்தை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் சம்பளத்தை ஏன் பிடிக்க கூடாது என்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை சின்ன அனுப்பானடி சேர்ந்த உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பகுளம டவுன்ஹால் ரோட்டில் உள்ளது.அதன் கலைத் தோற்றங்களையும் மறைக்கும் வகையில் நான்கு புறமும் வணிக நோக்கில் கட்டுமானங்கள் உள்ளனநீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. தெப்பக்குளத்தில் குப்பை குவிப்பது, கழிவுநீர் கலக்கிறது இவ்விவகாரத்தை உயர் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டில் தானாக முன் வந்து விசாரித்து உத்தரவிட்டதன் பேரில், தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் மேல் நடவடிக்கை இல்லை தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் 2019 ஆம் ஆண்டில் சில கடைகள் அகற்றப்பட்டது . அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் முன்னேற்றமில்லை. அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே கூடல் அழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் கலைநயத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்ருவதைஉறுதி செய்ய வேண்டும் . குப்பை குவிப்பது, கழிவுநீர் கலப்பதை தடுத்து தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டு வந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .அரசு தரப்பில் 195 கடைகளில் 99 கடைகள் அகற்றப்பட்டுள்ளது கடைகளை அகற்றும். நடவடிக்கைக்கு எதிராக சில கடைக்காரர்கள் அறநிலையத் துறையிடம் சீராய்வு மனு செய்துள்ளனர். அது நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது .

மனுதாரர் தரப்பில், தெப்பகுளம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது .மேலும் தெப்பக்குளத்தில் மைய மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் தெப்பக்குளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது? சரியாக வேலை செய்யாத அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யலாம் எனவும் நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் மனுதாரர் தாக்கல்செய்த போட்டோக்களை பார்க்கும் பொழுது தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை எனத் தெளிவாகிறது. குளத்தின் தற்போதைய புகைப்படங்களை இந்து அறநிலையத்துறை மற்றும் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்க அறிவுறுத்தியும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Updated On: 25 Nov 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!