பேராசிரியை பாத்திமா மீதான 2 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி பேராசிரியை பாத்திமா
தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா மீதான 2 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்தமனுவில் கூறியதாவது .நான் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறேன். பல்வேறு சமூக நல இயக்கங்களுடன் இணைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் போராட்டம் உட்பட பல்வேறு சமூகநல போராட்டங்களில் பங்கு பெற்றுள்ள நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்னையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதேபோல் 2020ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தை நடத்தினேன்.
இந்த இரண்டு போராட்டங்களும் கொரோன தொற்று விதிமுறைகளை பின்பற்றாமல் நோயை பரப்பும் விதமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவும் நடத்தியதாக, என் மீதும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், மனுதாரர் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது ஜனநாயக ரீதியிலான ஒரு போராட்டம்.பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனவே இது சட்ட ஒழுங்கிற்கு எதிரான போராட்டமாக கருதமுடியாது.மேலும் இந்த போராட்டத்தின் மூலம் கொரோனா பரவியது என்று கூற முடியாது.எனவே இந்த இரண்டு வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது.மனுதாரர் மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளாக சேர்த்து உள்ள அனைவரும் மீதான வழக்கும் ரத்து செய்யப்படுகிறதுஎன கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu