மதுரை மேலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மதுரை மேலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
X
மதுரை மேலூரில் அதிமுக சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

மேலூர் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு .

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 27வது வார்டு உறுப்பினர்களுக்கான அதிமுக சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை இன்று அதிமுக கட்சி வெளியிட்டது.

நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் ஆர்வத்துடன் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.



இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒப்புதலோடு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா அவர்கள் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்தார்.

இதனையடுத்து கழக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியினை நாளை தொடங்கும் என கூறப்பட்டுள்ளன.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!