முகநூலில் அவதூறாக பதிவு செய்ததாக பதியப்பட்ட வழக்கு ரத்து
பைல் படம்
முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக போலீஸாரால் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி குறித்து முகநூலில் அவதூராக பதிவு செய்ததாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தது மதுரை கிளை உயர் நீதிமன்றம். ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து முகநூலில் அவதூராக பதி விட்டதாக சிவராஜா பூபதி என்பவர் மீது 153 ,504, 505,( 2 )ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கை ரத்து செய்ய கோரி சிவராஜா பூபதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தாக்கல் செய்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மனுதாரர் மீது 153 ,504, 505,( 2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் அதுபோல மனுதாரர் எந்த செயலிலும் ஈடுபடவில்லை.ஆகவே அவர் மீது வழக்குப் பதிவு செய்தது செல்லாது என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
உத்தரவில் மனுதாரர் மகாபாரதத்தின் கடைசி அத்தியாயத்தை படிக்க வேண்டும் என விரும்புகிறேன்.அனைவரும் இழந்துவிட்ட சூழலில் யுதிஷ்டிரன் கடைசியாக சொல்கிறான், அவர் சொர்க்கத்தின் உள்ளே நுழைந்ததும் அங்கே மகிழ்ச்சியுடன் துரியோதனன் அமர்ந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரம் நிறைந்த கடுமையான வார்த்தைகளை உதிர்த்தான். நாரதர் புன்னகையுடன் அவரிடம் அப்படி இருக்கக்கூடாது யுதிஷ்டிரா சொர்க்கத்தில் அனைத்து பகைகளும் நின்றுவிடும், மன்னன் துரியோதனனை அவ்வாறு சொல்லாதே எனக் குறிப்பிடுவார். அதுபோல உயிரிழந்த முப்படைகளின் தளபதி பாதுகாப்பு குறித்து மனுதாரர் விமர்சித்ததற்கும் நம் கலாசாரத்திற்கும் உகந்ததல்ல என குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu