மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம்

மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம்
X

மழையால் சேதமடைந்த வீடு.

மேலூரில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெய்த கனமழையால் மேலூர் வட்டாரத்தில் கூரை வீடுகள் உள்ளிட்ட 6 பேர் இடிந்து சேதமடைந்தன. மலம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் பத்திரிக்கையாளர். இவரது ஓட்டு வீடு, கோவில்பட்டியில் அடைக்கன் வீடு, மற்றும் கிடாரிப்பட்டியில் 3 வீடுகள் உட்பட 6 வீடுகள் என்று இடிந்து சேதமடைந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கனமழையால் மேலூர் வட்டாரத்தில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இடிந்த வீடுகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு