வாடிப்பட்டியில் காட்டெருமைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்
வாடிப்பட்டியில் காட்டெருமைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடபுறத்தில் பரந்து விரிந்திருக்கும் சிறுமலையில் பலதரப்பட்ட அபூர்வ மூலிகைகள் இருப்பதால் சிறு மலைக்கு மூலிகை மலை என்ற பெயரும் உண்டு. இங்கு காபி ஏலக்காய் மிளகு போன்ற பயிர்களும் பழங்கள், காய்கறிகளும் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அழகே உருவானது இந்த சிறுமலை.
இந்த, சிறுமலையில் ஆபத்தை உருவாக்கும் வனவிலங்குகளும் பெருமளவில் உள்ளன. மேலே, உள்ள தோட்டங்களில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனவிலங்குகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும், அடிக்கடி மலையிலிருந்து கீழே இறங்கி வருவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
இதுபோன்று, மலையடிவார கிராமத்தில் இறங்கும் வனவிலங்குகள் மழையை ஒட்டி பயிர் செய்யப்பட்டிருக்கும் பயிர்களை உணவுக்காக அழித்து விவசாயிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை வாடிப்பட்டி அருகே உள்ள பழனி ஆண்டவர் கோயில், சிறுமலை அடிவாரத்தில் காட்டெருமைகள் கூட்டமாக இறங்கி, அங்கே பயிரிடப்பட்டிருக்கும் விளைநிலங்களில் புகுந்தன . இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை கருத்தில் கொண்டு வனத்துறையினர் வனவிலங்குகளை மலையில் இருந்து தரை இறங்க விடாமல் தடுத்து விவசாயத்தை பாதுகாத்து தரவேண்டும் என மலையடிவாரத்தைச் சார்ந்த கிராம மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu