தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் கேட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் கேட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
X

பைல் படம்

சுதந்திர போராட்டத்திற்காக போராடிய தியாகியின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கேட்ட மனுமீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை மாவட்டம், தேனியை சேர்ந்த சாயிதாபேகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்என் கணவர் முகமது ஷெரிப் இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 8- 10 -1943 முதல் 11- 4- 1944 வரை பெல்லாரி அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனால் தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தேன்.என கணவர் தியாகி பென்ஷன் பெறாததால் எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என நிராகரித்தனர்.

இதை எதிர்த்த வழக்கில் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனாலும் எனது மனு மீண்டும் நிராகரித்துள்ளனர்.அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில், முன்பு நிராகரித்த அதே காரணத்தை கூறி மீண்டும் நிராகரித்துள்ளனர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வயது வரம்பு, சிறை காலமோ எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தியாகிகள் அனுபவித்த துன்பத்திற்கும், தியாகத்திற்கும் கடன் பட்டுள்ளோம்.இதுபோன்ற தியாகத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் மறுப்பது என்பதை எப்போதும் நியாயப்படுத்த முடியாது . எனவே மனுதாரருக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்ப பென்சன் வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மனுவை தேனி மாவட்ட ஆட்சியர் ஆறு வாரத்திற்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!