மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்
X

மதுரை மேலூரில் ரேக்ளா ரேஸ் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பந்தய தூரத்தை கடந்து காளைகள் சீறிப்பாய்ந்து அசத்தலாக ஓடிச் சென்றது. இந்த பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரியமாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் எல்கை தூரத்தை கடந்து மாட்டு வண்டியும் சீறிப்பாய்ந்து வந்த நிலையில் முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயம் 22 மாடு வண்டிகளும், இரண்டாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 17 மாட்டு வண்டிகளும் பங்கேற்றது.

இதில் பெரிய மாட்டு பிரிவில் முதல் பரிசை மாநில காளை வளர்ப்போர் சங்கத் தலைவர் அவணியாபுரம் எஸ். கே .ஆர். மோகன்குமார் காளை 130000 பரிசு மற்றும் கேடயமும் பெற்றது. இரண்டாம் பரிசினை நொண்டி கோவில்பட்டி துரைபாண்டி ஒரு லட்சம் ரூபாயையும், மூன்றாவது பரிசு வல்லாளப்பட்டி மகாவிஷ்ணு எழுபதாயிரம் பெற்றார். நொண்டி கோவில்பட்டி அருகே சந்திரன் மாடு ஆறுதல் பரிசு பெற்றது.

இதேபோல் சின்ன மாட்டு பிரிவில் முதல் பரிசையும் மாநில காளை வளர்ப்போர் சங்கத் தலைவர் அவனியாபுரம் மோகன்குமார் மாடு முதல் பரிசான ரூ 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கேடயத்தையும் பெற்றது. இரண்டாமிடத்தை எட்டிமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் பங்கஜம் கணேசன் 50 ஆயிரம், 3-ஆவது பரிசு மாநில காளை வளர்ப்போர் சங்க பொருளாளர் நெல்லை கண்ணன்பெெற்றார். மேலும் ஆறுதல் பரிசு சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் மாடு ரூ. 10 ஆயிரம் பரிசுகளை பெற்றார்.

முதல் நான்கு இடங்களுக்கு வந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் கேடயங்களை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். முன்னதாக மேலூரில் இருந்து சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் வழிநெடுகிலும் ஏராளமான ரேக்லாரேஸ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர்.

இந்த பந்தயத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் கழக இலக்கிய அணி மாநில துணை செயலாளர் பாண்டியன் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future