மானாமதுரை மூன்று கிராமத்தில் கால்வாயின் குறுக்கே 2வது பாலம் கட்ட தடை கோரி வழக்கு

மானாமதுரை மூன்று கிராமத்தில் கால்வாயின் குறுக்கே 2வது பாலம் கட்ட தடை கோரி வழக்கு
X
மானாமதுரை மூன்று கிராமத்தில் கால்வாயின் குறுக்கே 2வது பாலம் கட்ட தடை கோரி வழக்கு: மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிசீலனை செய்ய உத்தரவு

மானாமதுரை கீழபசளையை சேர்ந்த சங்கையா உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மமனுவில். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள. கீழ பசலை, மேல பசலை ,சங்கமங்கலம் மூன்று கிராமங்களிலும் சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்பகுதியிலுள்ள ஆதனூர் மதகு அருகே கடந்த 2019ஆம் ஆண்டு கிருஷ்ணன் என்பவர் ஒரு பாலம் கட்ட கோரி விண்ணப்பித்தார். இதற்கு பொதுப்பணித்துறை சார்பில் விதிமுறைகளுடன் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அந்தப் பாலத்தின் வழியாக தற்போது விவசாய நிலங்களுக்குச் சென்று வருகிறோம் .இந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காக பாசன கால்வாயில் ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகே 100 மீட்டர் இடைவெளிக்குள் மற்றொரு பாலம் அமைப்பதற்காக பொதுப்பணித் துறையிடம் அனுமதி கோரியுள்ளார் .

அவருக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் எங்கள் பகுதியில் உள்ள பாசன கால்வாயை தூர்வார இயலாமல் போகும் அபாயம் உள்ளது .இதனால் எங்கள் பகுதியில் உள்ள விளை நிலங்களின் நீராதாரம் பாதிக்கப்படுவதுடன் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகே மற்றொரு பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி புஷ்பா, சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது இதையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து சிவகங்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!