விவசாய மின் இணைப்பு பெற லஞ்சம்: விவசாயிகள் குமுறல்

விவசாய மின் இணைப்பு பெற லஞ்சம்: விவசாயிகள் குமுறல்
X
லஞ்சம் கொடுப்பவர்களுக்கே இலவச மின் இணைப்பு கொடுப்பதாக மேலூர் மின்வாரியம் மீது விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலூர் தாலுகாவில் விவசாயத்திற்கு 5 எச்.பி., திறனுள்ள இலவச மின்சாரத்திற்கு நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பத்துள்ளனர். மின் இணைப்புக்கு மனுசெய்து 17 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு வழங்காமல் அதன் பிறகு மனு கொடுத்தவர்களுக்கு வழங்க, மின் கம்பங்களை ஊன்றி வருகின்றனர்.

எட்டிமங்கலம் விவசாயி சுப்பையா கூறுகையில், 2004 ம் ஆண்டு ஆழ்குழாய் அமைத்து தேவையான ஆவணங்களை மின்வாரிய அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். 2021ல் மின் இணைப்பு தர உள்ளதால் தயார் நிலையில் இருக்கும்படி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பதிவு தபால் வந்தது. ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.

அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது அலுவலகம் எதிரே உள்ள கணினி மையத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் இணைப்பு கொடுக்கப்படும் என்கின்றனர்.

எனவே, துறை சார்ந்த உயரதிகாரிகள் ஆய்வு செய்து வரிசைப்படி மின் இணைப்பு வழங்கவேண்டும். லஞ்ச ஒழிப்பு துறையினரும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

மின் உதவி பொறியாளர் நாகதிருத்தணி கூறுகையில், விவசாயிகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மின் இணைப்பு குறித்து என்னை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!