மேலூர் கொட்டாம்பட்டியில் லஞ்சம் பெற்ற மின்பொறியாளர் கைது

மேலூர் கொட்டாம்பட்டியில் லஞ்சம் பெற்ற மின்பொறியாளர் கைது
X
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தில் உதவி பொறியாளராக இருக்கும் தங்கமணி என்பவர் விவசாய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் அவரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின் இணைப்பு தருவதற்கு மதுரை மாவட்டம் பகுதியில் திருமங்கலத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் தொடர்ந்து இச்சம்பவம் நடைபெற்று வருவது மதுரை மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future