வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி
மதுரை வேளாண் கல்லூரி முகப்பு தோற்றம்
மதுரை ஒத்தக்கடையில் அமைந்துள்ள வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் தேனீக்கள் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது.
இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் வெளியிட்ட தகவல்:ஜனவரி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஒரு வார தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தேனீக்கள் வகைகள், அதன் பண்புகள், தேனீ குடும்பம் அதன் பணிகள், வணிக ரீதியில் தேனீ வளர்ப்பு, தேனீக்களை பராமரித்தல், தேனீக்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள், மேலாண்மை கொசுத் தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைப்பு, பண்ணைய முறையில் தேனீ வளர்ப்பு, தேன் மற்றும் இதர பொருள்கள் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் கற்றுத்தரப்படும்.
தேனீக்கள் வளர்ப்பில் வெற்றி அடைந்தவர்கள் தொழில் முனைவோர் தோட்டங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் .இப்பயிற்சிக்கு வர விரும்பும் உள்ள விவசாயிகள் ,மகளிர் சுய உதவிக்கழுவினர் 94 88 44 87 60 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வரும் 25 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu