நெல் அறுவடையில் மாற்று யோசனை: சாதனை செய்த விவசாயி
நெல் அறுவடையில் மாற்று யோசனையுடன் சாதனை செய்த மதுரை மாவட்ட விவசாயி
மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாக மங்கலத்தில் புல்வெட்டும் கருவி மூலம் நெல் அறுவடை செய்யும் புதுமை விவசாயி செலவின பணத்தை மிச்சப்படுத்த மாற்று யோசனை புதிய வழிமுறை கண்டுபிடித்துள்ளார். நெல் அறுவடையில் இந்த மாற்று யோசனைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே மதுரை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள நாகமங்கலம் கிராமத்தில் விஜய் விவசாயி ஒருவர் புதிய முயற்சியாக நெல் அறுவடையை புல்வெட்டும் கருவி மூலம் சாமர்த்தியமாக யோசித்தும் அறுவடைப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.
தனக்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் சாகுபடி செய்து இருந்த நிலையில் அதனை அறுவடை செய்ய நெல் இயந்திர அறுவடையை நாடியபோது மணிக்கு 3000 ரூபாய் வரை செலவு ஆகும் என்ற காரணத்தால் அதனை தவிர்க்கும் வகையில் புல் வெட்டும் கருவியை நெல் அறுக்கும் வகையில் அதில் உள்ள அருவை பிளேடை மாற்றி தனது வயலில் தனிநபராக அறுவடையை மேற்கொண்டு வருகிறார்.
இதன் மூலம் மணிக்கு சுமார் ஒரு லிட்டர் பெட்ரோல் அதாவது 100 ரூபாய் வரை மட்டுமே செலவு ஆகிறது.மேலும் வைக்கோல் அளவும் குறையாமல் கிடைப்பதாகவும் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர் கதிர் அறுவடை செய்வதால் செலவு மிச்சமாகிறது.இப்பனியில் சற்று உடல் உழைப்புடன் பணியை மேற்கொள்வது திருப்திகரமாக உள்ளதாகவும் கூறினார்.குடும்பத்துடன் இந்த பணியை மேற்கொண்டு வருவதாக விவசாய விஜய் கூறியுள்ளார்..மேலும் இவரது புதிய முயற்சிக்கு விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் இவருடைய சாமர்த்திய யோசனைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu