சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக 9 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக 9 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
X

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர் . 

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக 9 காவலர்கள் பாதுகாப்புடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 காவலர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில சேர்ந்த வணிகர்கள் தந்தை மகன் ஜெயராஜ், பெனிஸ் கடந்த ஜூன் 19-ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில்.,சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ் , செல்லத்துரை, வெயில் முத்து, தாமஸ், பிரான்சிஸ், சமய துறை உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர் .


Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!