மேலூர் அருகே 3ம் ஆண்டு கன்னி நாய்கள் கண்காட்சி
கன்னி நாய்கள் கண்காட்சி.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த ஆம்பூரில் பாரம்பரிய நாட்டு வகையான கன்னி நாய் வகைகளையும் அறிமுகம் செய்யும் வகையில் மூன்றாம் ஆண்டாக கண்காட்சி விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் ஏராளமான நாட்டு வகை நாய்கள் உள்ளன. அவற்றில் கன்னி வகை நாய்கள் ஒன்று. இவை தற்போது அழிவின் விளிம்பை நோக்கிச் செல்லும் காரணத்தால் நாய் ஆர்வலர்கள் மற்றும் நாய் வளர்ப்போர் தமிழகம் முழுவதும் ஒன்றிணைந்து உள்ளனர். இதில் நாய்களின் வளர்ச்சி நோய் குறைபாடு விற்பனை போன்ற அனைத்தும் இதில் பரிமாறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலும் இதனை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆம்பூரில் தமிழகத்தில் உள்ள அனைத்து நாய்களையும் வரவழைக்கப்பட்டு கண்காட்சி நடத்தப்பட்டது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட கன்னி நாய்கள் பங்கேற்றன.
இந்நிகழ்வு பகுதி மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களின ஆதரவு வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu