ஹெலிகாப்டர் சகோதரர் சாமிநாதனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
.கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர் சாமிநாதனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .
மனுவில் ,தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் நீதிமன்ற விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் கட்டுப்படுவதாக கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார் . இந்த மனு இன்று நீதிபதி ஆனந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.கைது செய்து 150 நாட்களை கடந்த நிலையில் இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, சுவாமிநாதனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu