ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின் சொத்து

ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின் சொத்து
X

மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் 

மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின் சொத்து கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளது.

மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குகிறார் சு.வெங்கடேசன். இந்த நிலையில் அவர் பெயரிலும் அவரின் மனைவி கமலா பெயரிலும் உள்ள சொத்து மதிப்பு கடந்த தேர்தலைக் காட்டிலும் சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளது. சு.வெங்கடேசனின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு? பார்க்கலாம்.

இவர் மதுரை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதன்படி, சு.வெங்கடேசன் பெயரில் அசையும் சொத்து 98 லட்சத்து 26 ஆயிரத்து 389 ரூபாய் உள்ளது. அசையா சொத்து எதுவும் இல்லை.. அவரது மனைவி பெயரில் ரூ.91 லட்சத்து 16 ஆயிரத்து 165 ரூபாய் சொத்து உள்ளது. சு.வெங்கடேசனின் பூர்வீக சொத்து மதிப்பு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் ஆக உள்ளது. மகள் யாழினிக்கு ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 954 சொத்து உள்ளது. ஆக மொத்தம் ரூ. 2 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 389 உள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கையிருப்பு எவ்வளவு?

கையில் ரொக்கமாக ரூ.3.5 லட்சம், மனைவி கையில் ரூ.25 ஆயிரம், மகள்களிடம் மொத்தம் ரூ.7 ஆயிரம் உள்ளது. டிவிஎஸ் ஸ்கூட்டி கெஸ்ட் என்னும் ஒரேயோர் இருசக்கர வாகனம் மட்டும் சு.வெங்கடேசனிடம் உள்ளது. அவரின் மனைவி, மகள்களிடம் எந்த வண்டியும் இல்லை.

சு.வெங்கடேசன் மீது எந்த வழக்குகளும் இல்லை. அவர் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவும் இல்லை. சு.வெங்கடேசனிடம் 10 பவுன் தங்க நகைகள் உள்ளன. அவரின் மனைவியிடம் 25 பவுன் தங்க நகைகள் உள்ளன. மகளிடம் 75 கிராம் தங்க நகைகள் உள்ளன.

அதே நேரத்தில் சு.வெங்கடேசன் பெயரில் நிலங்கள், கடைகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகள் எதுவும் இல்லை. அவர் மனைவி பெயரில் எந்த நிலமும் இல்லை. எனினும் அதேபோல சு.வெங்கடேசன் பெயரில் வீட்டுக் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன.

வருவாய் ஆதாரம் என்ன?

வருவாய்க்கான ஆதாரமாக தன்னுடைய எழுத்துப் பணி, நூல்கள் எழுதியதற்கான காப்புரிமைத் தொகை மற்றும் மக்களவை உறுப்பினருக்கான ஊதியத்தைக் குறிப்பிட்டு உள்ளார். இந்த தகவல்களை வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது அளித்த பிரமாணப் பத்திரத்தில் சு.வெ. தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2019 பொதுத்தேர்தலில் போட்டியிட்டபோது, தனது பெயரில் ரூ.3.28 லட்சம், மனைவி கமலா பெயரில் 9.25 லட்சம், மகள் யாழினி பெயரில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 300, மேலும் அசையா சொத்து ரூ.4.50 லட்சம் உட்பட மொத்தம் ரூ.19 லட்சம் மதிப்பு என கணக்கு காட்டி இருந்தார். இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய சொத்து மதிப்பு சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!