பாஜக.,வை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

பாஜக.,வை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
X

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மதுரையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு முன்னர் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்ததால் மோதல் ஏற்பட்டது.அதற்கு காரணமான பாஜக கட்சியினரை கண்டிக்கும் வகையில் விசிக அமைப்புச் செயலாளர் எல்லாளன், மாவட்டச் செயலாளர்கள் இன்குலாப்,செல்வரசு,துணைப் பொதுச் செயலாளர் வில்லவன்கோதை தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், வழக்கறிஞர்கள் சரவணன்,ரவிக்குமார் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் , இன்று மதுரை திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசாரால் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?