ஜாதி மோதலை உண்டாக்க விசிக நினைக்கிறது -எல்.முருகன்

ஜாதி மோதலை உண்டாக்க விசிக நினைக்கிறது -எல்.முருகன்
X

அரக்கோணம் விவகாரத்தை முன் வைத்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் ஜாதி மோதலை உண்டாக்க நினைக்கிறது என மதுரையில் பாஜக மாநில தலைவர் முருகன் குற்றம் சாட்டினார்.

மதுரை அவுட் போஸ்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இதை கண்டிக்கும் விதமாக மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து எல்.முருகன் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறுகையில் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது, பாஜக அரசு அம்பேத்கரை பெருமைபடுத்தியுள்ளது, அம்பேத்கர் சாதி தலைவர் அல்ல.

திருமாவளவன் ஜாதி அரசியலை கையில் எடுத்து உள்ளார், அரக்கோணம் இரட்டை கொலை இரண்டு நண்பர்களுக்கு இடையிலான மோதலாகும், அரக்கோணம் விவகாரத்தை வைத்து விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் ஜாதி மோதலை உண்டாக்குவதே நோக்கமாக வைத்துள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது என கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!