5 ஆயிரம் தடுப்பூசி செலுத்த இலக்கு- மதுரை ஆணையர் பேட்டி

5 ஆயிரம் தடுப்பூசி செலுத்த இலக்கு- மதுரை ஆணையர் பேட்டி
X

மதுரையில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. இந்த தடுப்பூசி திருவிழா மூலம் நாள்தோறும் 5ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறினார்.

மதுரை மாநகராட்சி மற்றும் திருமுருக பக்த சபை சார்பில் மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கி வரும் 16 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர் விசாகன் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பேட்டியளித்த போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது எனவும், ஏப்ரல் 14,15,16 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் போதுமான அளவிற்கு தடுப்பூசி இருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!