ஓட்டு எண்ணிக்கையில் அதிமுக தில்லு முல்லு செய்ய வாய்ப்பு-திருமாவளவன்

ஓட்டு எண்ணிக்கையில் அதிமுக தில்லு முல்லு செய்ய வாய்ப்பு-திருமாவளவன்
X

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக கூட்டணி தில்லு முல்லு செய்ய வாய்ப்பு உள்ளது என தொல்.திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மதுரை மாநகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது , தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, அதிமுக கூட்டணி தில்லு முல்லு செய்ய வாய்ப்பு உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கணிப்பு, மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை படி திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பின் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக வினர் தெரிவித்து வருகின்றனர். எங்களுக்கு பிரதமர் மோடி உறுதுணையாக உள்ளார் என கூறுகின்றனர். இது எங்களுக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளது .தமிழகம், புதுச்சேரியில் பாஜக., வேரூன்ற பார்க்கிறது. அதை தடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்