ஊராடங்கை முழுமையாக கடைபிடித்த பொதுமக்களுக்கு நன்றி -மதுரை எம்.பி

ஊராடங்கை முழுமையாக கடைபிடித்த பொதுமக்களுக்கு நன்றி -மதுரை எம்.பி
X

உலக சுற்றுசூழல் தினமான இன்று மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பகுதி பொதுமக்களிடம் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் இந்திய வாலிபர் சங்கத்தினர் நேரடியாகச் சென்று அவர்களிடம் இருந்து தேவையற்ற பிளாஸ்டிக் மற்றும் உலோக பொருட்களை பெற்று அதனை மறுசுழற்சிக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நிவாரண நிதியாக வழங்க உள்ளனர். இதில் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் பங்கேற்று பொது மக்களிடம் நேரடியாக தேவையற்ற பிளாஸ்டிக் மற்றும் உலோக பொருட்களை பெற்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் பேசும்போது

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு மதுரை மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைப்பிடித்து அதன் விளைவாகவே இது சாத்தியமாகியுள்ளது என்று தெரிவித்தார்.

Next Story
ai solutions for small business