தல்லாகுளம் கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேகம்

தல்லாகுளம் கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேகம்
X

மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக கோயில் முன்பாக பட்டாச்சாரியார்கள், அனுக்ஞை, விஷ்வக்சேனர் பூஜை, கடஸ்தாபனம், மிருத்ஞ்ச கரணம், யாகபூஜைகள், பூர்ணாகுதி, வாஸ்துசாந்தி, பிரவேசபலி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இன்று யாகபூஜைகளும், கடங்கள் புறப்பட்டு வந்து கோயில் விமானத்தில் பட்டர்களால் புனித நீர் ஊற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து கருப்பணசாமிக்கு மஹா அபிஷேகம் பூஜைகள், அன்னதானம் வழங்குதல் போன்றவைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை,கோவில் நிர்வாகிகள் மணிகண்டன் , ஹரி உட்பட பலர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!