ஹோட்டல் உரிமையாளருக்கு சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்

ஹோட்டல் உரிமையாளருக்கு சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்
X

மதுரையில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறாமல் ஹோட்டல் நடத்திய உரிமையாளருக்கு 2 மாதம் சிறைத் தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வந்தவர் துளசிராஜ். இவர் தான் நடத்தி வரும் ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து முறையாக உரிமம் வாங்காமல் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இது குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் அவர் உரிமம் வாங்கவில்லை. தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல் உரிமையாளருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினர்.

அதன் பிறகும் அவர் உரிமம் வாங்காமல் ஹோட்டல் நடத்தி வந்தார். இதனால், மதுரை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு மதுரை மாவட்டம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் ஹோட்டல் உரிமையாளருக்கு 2 மாதங்கள் சிறைத் தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil