சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்- பொதுமக்கள் அச்சம்

சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்- பொதுமக்கள் அச்சம்
X

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளபடாமல் , சாலை முழுவதும் சிதறி உள்ளதால் பொதுமக்கள் நோய் பரவுமோ என அச்சத்தில் உள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளபடாமல் , சாலை முழுவதும் சிதறி உள்ளது. குறிப்பாக பைபாஸ் சாலை, வானமாமலை நகர், தனியார் மோட்டார் வாகன விற்பனை நிலையம் அருகே செல்லும் சாலையில் 3 குப்பைத் தொட்டிகள் உள்ளது. சர்வீஸ் சாலை முழுவதும் குப்பைகளால் நிரம்பி காற்றில் பறந்து சாலை வரை குப்பைகள் வருகிறது.

மேலும் , அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி ஈக்கள் மொய்த்து வீட்டிலுள்ள தின்பண்டங்களில் அமர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் எந்தவிதமான பதிலும் இல்லை, தொலைபேசியை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் , அருகிலேயே இரு மருத்துவமனைகளும், ஒரு உணவு விடுதியும் உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் தொலைபேசி அழைப்பை ஏற்காத அதிகாரி மீது மாநகராட்சி ஆணையாளர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். உடனடியாக மாற்று சுகாதார அதிகாரிகள் மூலமாக குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர்.

Tags

Next Story