திமுக நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதா -அமைச்சர் கேள்வி

திமுக நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதா -அமைச்சர் கேள்வி
X

என்னை கேலியும் கிண்டலும் திமுகவினர் செய்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற நல்ல திட்டங்களை அவர்கள் கொண்டு வந்துள்ளார்களா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதி முத்துப்பேட்டையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவர் பேசும்போது, திமுக கருணாநிதி ஆட்சி காலகட்டத்தில் போடப்பட்ட பாதாளச் சாக்கடையின் மூலமாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது.அதை சரியாக பராமரிக்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் இதனை முதலில் சரி செய்தேன். தற்சமயம் நிரந்தர தீர்வு கண்டுள்ளோம்.

பத்தாண்டுகள் மதுரை மேற்கு எம்எல்ஏ வாக இருந்த காலகட்டங்களில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். திமுக தலைவர்கள் என்னை கேலியும் கிண்டலும் செய்து கொள்ளலாம். ஆனால் நான் முறைப்படியான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என்பதை யாராலும் மறைக்க முடியாது. தடையில்லா மின்சாரத்தை தொடர்ந்து தமிழகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி