மதுரை -தென் தமிழகத்திற்கான ஆக்சிஜன் ரயில் இன்று கூடல்நகர் வந்தடைந்தது

மதுரை -தென் தமிழகத்திற்கான ஆக்சிஜன் ரயில் இன்று கூடல்நகர்  வந்தடைந்தது
X
தென் தமிழக பயன்பாட்டிற்கான 4-வது ஆக்சிஜன் ரயில் இன்று கூடல்நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான 4வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் இருந்து மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 2 டேங்கர் லாரிகளில் 31.02 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது. இதற்காக டேங்கர் லாரிகள் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக கூடல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்திற்கு வந்த 29 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இதையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 1734.01 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைக்கும் ஆக்சிஜன்கள் விநியோகிக்கப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!