மதுரையில் 5 வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை

மதுரையில் 5 வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை
X

மதுரையில் ஒரே பகுதியில் 5 வீடுகளில் கதவை உடைத்து இரண்டு வீட்டில் சுமார் 30 பவுன் நகை இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரை முத்துப்பட்டி பகுதி ஒய்எம்சிஏ நகர் பகுதியில் , சங்கரநாராயணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தூங்கி இன்று காலையில் எழுந்து பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள சுமார் 30 பவுன் தங்க நகை இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரித்த போது, அப்பகுதியில் தொடர்ந்து ஐந்து வீடுகளில் மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது.

அதில் ஆர்எம்எஸ் காலனி கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் கீதா என்பவரது வீட்டில் ஆள் இல்லாத பொழுது ரூ. 2 ஆயிரம் பணம், இரண்டு தங்ககாசு, காமாட்சி விளக்கு கொள்ளை அடித்தது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி