அமைச்சர் செல்லூர்ராஜூ வேட்புமனு தாக்கல்

அமைச்சர் செல்லூர்ராஜூ வேட்புமனு தாக்கல்
X

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட அமைச்சர் செல்லூர்ராஜூ வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச்.12 ஆம் தேதி துவங்கிய நிலையில்,தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலேயே போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வேட்பாளருடன் இரண்டு நபர்களை மட்டும் அனுமதித்தனர்.

தொடர்ந்து அதிமுக மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்லூர் ராஜூ வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு காரில் வந்தார். அவருக்காக வழிநெடுகிலும் காத்திருந்த அதிமுக நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். தொடர்ந்து மதுரை விராட்டிபத்து பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மதுரை விராட்டிபத்து பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்க உள்ளார்.

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!