இரண்டுமுறை எம்எல்ஏ "வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடு" கேட்டு மனு
மதுரை மேல பொன் நகரத்தைச் சேர்ந்தவர் நன்மாறன். இவர் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். பதவிக் காலத்தில் அரசியலும் சரி சட்டமன்ற உறுப்பினர் பதவியினை நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றியவர் என்று மாற்றுக் கட்சியினரால் பெயர் பெற்றவர்.
இந்த நிலையில் நன்மாறன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். மதுரை மாவட்ட குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களுடன் கியூ வரிசையில் நின்று மனு கொடுப்பதற்காக காத்திருந்தார். அங்கு அவரை அடையாளம் கண்டறிந்த சிலர் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரியிடம் அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நன்மாறன் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார் அந்த கோரிக்கை மனுவில் "நான் இப்போது மதுரை மேல பொன்னகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை இதனால் மாதா மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரம நிலையில் உள்ளேன். எனவே மதுரை ராஜாகூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டி இருந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு வெளியே வந்த நன்மாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் இப்போது மதுரை மேலப்பொன் நகரத்தில் வசித்து வருகிறேன். எனக்கு நிரந்தரமாக குடியிருக்க வீடு இல்லை. எனவே மதுரை ராஜாக்கூரில் அரசாங்கம் சார்பில் கட்டித்தரப்படும் குடியிருப்பில் இலவச வீடு கேட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளேன் என்றார். அவரிடம் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள் உங்களுக்கு சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், கட்சியிலும் நண்பர்களிடமும் உதவி ஏதும் கேட்டீர்களா எனக் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே நான் யாரிடமும் கேட்கவில்லை என தெரிவித்து விட்டு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu