எரிவாயு கசியும் வீட்டுக்குள் சிக்கிய தம்பதி மீட்பு

எரிவாயு கசியும் வீட்டுக்குள் சிக்கிய தம்பதி மீட்பு
X

மதுரையில் எரிவாயு கசியும் போது வீட்டிற்குள் சிக்கி கொண்ட தம்பதியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

மதுரை எஸ் எஸ் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன். அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இவரது சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கணவனும் மனைவியும் வெளியே செல்ல முயன்றனர்.அப்போது , அவரது வீட்டில் இருந்த கதவில் பொருத்தப்பட்டிருந்த ஆட்டோமேட்டிக் லாக் ஆனது தானாக மூடிக் கொண்டது. இதனால் என்ன செய்வது என புரியாமல் அவர்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மின் இணைப்பை துண்டித்து, நான்காவது மாடியில் குடியிருந்த சபரிநாதன் வீட்டின் கதவை உடைத்து தம்பதியை பத்திரமாக மீட்டனர். பின்னர் எரிவாயு கசிவை சரி செய்தனர் .பூட்டிய வீட்டுக்குள் எரிவாயு கசிசில் சிக்கிய தம்பதிகளை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!