மதுரை கோட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கம்
மதுரை மதுரைக் கோட்டத்தில் ஒன்றரை மாதங்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அரசு பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப் படுகின்றன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மே 9-ம் தேதி முதல் அரசு பேருந்துகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டது
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த வாரம் முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உட்பட 23 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 18,290 அரசு பேருந்துகள் உள்ளன. இதில் 9,333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மதுரைக் கோட்டத்தில் 1,400 பேருந்துகளும், மதுரை மண்டலத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 700 பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ள கோவை, திருப்பூர், கரூர், தஞ்சாவூர், நாகை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்காக மதுரை மண்டலத்தில் அனைத்து பணிமனைகளிலும் உள்ள அரசு பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை மட்டும் ஏற்ற ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu